திருவண்ணாமலை: செங்கம் அடுத்த ராஜாபாளையத்தைச் சேர்ந்தவர்கள் சிபிராஜ், ஏழுமலை, சூரியா. கூலித்தொழிலாளிகளான இவர்கள் பயிரை சேதப்படுத்தும் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து வந்துள்ளனர். நேற்று வனப்பகுதி அருகேயுள்ள விவசாய நிலத்திற்கு 3 பேரும் நாட்டு வெடிகுண்டு வைக்க சென்றனர். அப்போது திடீரென வெடிகுண்டு வெடித்து சிதறியது. அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.