பிரபல பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகான், கடந்த ஜனவரி 16ஆம் தேதி தன் வீட்டிலேயே மர்ம நபர் ஒருவரால் குத்தப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது நலமுடன் உள்ளார். குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சயீஃப் அலிகான் வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகளில், குற்றம்சாட்டப்பட்ட ஷரிபுல் இஸ்லாமின் கைரேகைகளுடன் எந்த கைரேகையுமே பொருந்தவில்லை என உயர்மட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.