தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு காலில் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது விபத்து ஏற்பட்டதாகவும், காலில் தசை கிழிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 3 எலும்பு முறிவு இருப்பதை மருத்துவர்கள் தற்போது கண்டுபிடித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.