வாந்தி எடுக்க முயன்ற பெண் தலை துண்டாகி பலி

57பார்த்தது
வாந்தி எடுக்க முயன்ற பெண் தலை துண்டாகி பலி
கர்நாடக மாநிலம் ஆலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம்மா என்ற 58 வயது பெண் அம்மாநில அரசு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவருக்கு வாந்தி எடுக்கும் உணர்வு வரவே ஜன்னல் வழியே தலையை நீட்டியுள்ளார். பின்னர் தலையை உள்ளே இழுக்கும் சமயத்தில் முன்னால் சென்ற டிப்பர் லாரியின் மீது அவர் தலை மோதியது. இதில் அவரது தலை மற்றும் வலது கை துண்டாகி சாலையில் விழுந்ததில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி