கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தற்கொலை

72பார்த்தது
கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தற்கொலை
உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியை சேர்ந்த விஜய் பிரதாப் சவுதான் (32) - ஷிவானி (28) தம்பதி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று (ஜன.10) நடந்த தகராறால் ஷிவானி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் மனமுடைந்த விஜய், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த ஷிவானி தான் வசிக்கும் பகுதியில் இருந்த மின் கம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி