சிகிச்சைக்கு வந்த 299 பேரை சீரழித்த டாக்டர்

59பார்த்தது
சிகிச்சைக்கு வந்த 299 பேரை சீரழித்த டாக்டர்
பிரான்சில், முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜோயல் லிஸ்கோர்னெக் (74) மீது பாலியல் குற்றங்கள் குவிந்துள்ளன. தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் பெரும்பாலானோர் 15 வயதிற்கும் குறைவான சிறார்கள் என்பதும், நோயாளிகள் மயக்க நிலையில் இருக்கும்போது அவர்களிடம் எல்லை மீறியதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில் விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி