2 செயற்கை கோள்களை இணைக்கும் டாக்கிங் பரிசோதனை ஜன.9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. கடந்த டிச.30-ம் தேதி பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் எஸ்டிஎக்ஸ் 01 மற்றும் எஸ்டிஎக்ஸ் 02 ஆகிய இரு செயற்கோள்கள் தனித்தனி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாளை (ஜன.07) காலை 9 மணிக்கு டாக்கிங் இணைப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜன.9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.