உ.பியில் வாட்டர் கீசர் வெடித்து பெண் ஒருவர் உயிரிழந்தார். தண்ணீர் வராத சமயங்களில் கீசரை அணைத்து விட வேண்டும். பயன்படுத்தி முடித்தப் பிறகு உடனடியாக சுவிட்சை ஆஃப் செய்வது அவசியம். கீசரை ஆன் செய்வதற்கு முன்பு குழாயில் தண்ணீர் வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் ஈரக் கைகளால் தொடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. குளிர்காலம் தொடங்கும் முன்பே டெக்னீஷியனை அழைத்து ஒரு சர்வீஸ் பார்த்துக் கொள்ள வேண்டும்.