திமுகவின் டாஸ்மாக் ஊழல் குறித்து தவெக விஜய் அறிக்கை வெளியிட்டார். அதில், “டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பணமோசடி குறித்து, அமலாக்கத்துறை பயன்படுத்திய வார்த்தைகளை பார்த்தால் திமுக அரசு பற்றி ஒரு ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், “திமுக செய்த ஊழலை வைத்து புத்தகமே எழுதலாம் என விஜய் கூறியது சரிதான். புத்தகம் மட்டும் அல்ல திரைப்படமே எடுக்கலாம்" என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.