ஹோண்டா நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட ஹார்னெட் 2.0 பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் 184.4 சி.சி. என்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 17 எச்.பி. பவரையும், 15.7 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் போன்றவை இடம்பெற்றுள்ளன. புதிய அம்சமாக ஆக்டிவா ஸ்கூட்டரில் உள்ளது போன்ற 4.2 அங்குல வண்ண டி.எப்.டி. டிஸ்ப்ளே உள்ளது. இதன் விலை ரூ. 1.57 லட்சம்.