சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாத காலமாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர டிராகன் (க்ரூ-10) விண்கலம் புறப்பட்ட நிலையில் அதில் முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விண்கலம் விண்வெளி மையம் சென்றடைந்தது. இதையடுத்து இருவரும் பூமியை நோக்கி வர உள்ளனர்.