தெலங்கானா: பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது வீடியோக்களில் பெட்டிங் செயலிகளை விளம்பரப்படுத்தியதற்காக அவர் மீது, சைபராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த FIR நகலை, ஐபிஎஸ் அதிகாரி சஜ்ஜனார் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அவர் கூறுகையில், “இந்த பெட்டிங் செயலிகள் இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கிறது. இப்படிப்பட்ட சைபர் பயங்கரவாதிகளை இப்போதே பின்தொடர்வதை நிறுத்துங்கள்” என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.