சென்னை ஐஐடி புத்தாக்க மையம் (Centre for Innovation) சார்பில் நடைபெற்ற திறந்தவெளி அரங்கு-2025ல், 1,000 மாணவ-மாணவிகள் உருவாக்கிய 60 தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்டுபிடிப்புகளை சந்தைக்கு எடுத்துச் செல்ல உதவிடுமாறு தொழில்துறையினருக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் அழைப்பு விடுத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி இதில் இடம்பெற்றுள்ள குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.