ஜாமீனில் வெளியே வரும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறை முன்பாக திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். மேலும், அவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் அவரை விடுவதற்கான பணிகளை சிறைத்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.