விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் சிவா பரப்புரை

61பார்த்தது
விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் வருகிற ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாதக சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், அதிமுக மற்றும் தேமுதிகஇந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று (ஜூன் 23) விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி