தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என துரை வைகோ கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் மதவாத சக்திகளுக்கு இடமளித்து விடக்கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசியலுக்கு வரும் அனைவரும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று விரும்பினாலும், மக்கள் மட்டுமே இறுதி முடிவு எடுப்பார்கள் என்றார். மேலும், கூட்டணி ஆட்சியை மதிமுக விரும்பியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.