SA20ல் பார்ல் ராயல்ஸ் அணிக்காக முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் களமிறங்க உள்ளார். SA20 வரலாற்றில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் தினேஷ் கார்த்திக் பெற உள்ளார். அடுத்த வருடம் ஜனவரி 9ம் தேதி தொடங்கும் புதிய சீசனுக்கு முன்னதாக தினேஷ் கார்த்திக் பார்ல் ராயல்ஸ் அணியில் வெளிநாட்டு வீரராக களமிறங்க உள்ளார். தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு விளையாடும் முதல் போட்டியாக SA20 இருக்கும்.