முருகனுக்கு உகந்த பங்குனி உத்திரத்திருநாளில் முருகனை வழிபடுவது பல்வேறு நன்மைகளை தரும். இன்று (ஏப்.11) வீட்டில் வழிபாடு செய்வோர் மாலை 6 மணிமுதல் 8 மணிக்குள் இறைவனுக்கு நெய் விளக்கு ஏற்றி, சர்க்கரை பொங்கல், தேன், தினை மாவு வைத்து வழிபாடு செய்யலாம். இவற்றை செய்ய முடியவில்லை என்றாலும் வாழைப்பழம், வெற்றிலைபாக்கு வைத்து முருகனின் திருப்புகழ் பாடி வழிபடுவது இறைவனின் அருளை பெற்றுத்தரும்.