திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்பட்ட நிலையில் அதற்கு காரணமாக அமைந்த வீடியோ வைரலாகி வருகிறது. தபெதிக சார்பில் அண்மையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பொன்முடி, பெண்கள் குறித்தும், சைவம், வைணவம் குறித்தும் சர்ச்சைக்குறிய வகையில் பேசி கடும் எதிர்ப்புகளை சம்பாதித்தார். பொன்முடியின் கட்சி பதவி தற்போது பறிபோயுள்ள நிலையில், இதற்கு காரணமான சர்ச்சைப் பேச்சு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.