இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In), Windows இல் WhatsApp டெஸ்க்டாப் பயனர்களுக்கு அதிக ஆபத்து எச்சரிக்கை இருப்பதாக கூறியுள்ளது. செயலியின் பழைய பதிப்புகளில், குறிப்பாக 2.2450.6-க்கு முன் வெளியிடப்பட்டவற்றில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த பாதிப்பு, சைபர் குற்றவாளிகள் தனிப்பட்ட தரவுகளையும், தகவல்களையும் திருட வழிவகுக்கும் என எச்சரித்துள்ளது. அறிமுகமில்லாத பெயர்கள் அல்லது லிங்குகளை திறக்கும்போது பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.