அமைச்சர் பொன்முடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “பொன்முடியின் இழிவான பேச்சை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பொன்முடியை கட்சி பதவியில் இருந்து நீக்குவதன் மூலம் பொதுமக்கள் அதனை கடந்து செல்வார்கள் என நினைக்காதீர்கள். பொன்முடி போன்ற அவமானகரமான கூட்டத்தை வழிநடத்தியதற்காக ஸ்டாலின் தலைகுனிய வேண்டும். இந்து தர்மத்தின் மீதான அவதூறு பேச்சுகளுக்கு திமுகவினர் பதிலளித்தே ஆக வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.