தங்கத்தின் விலை உலகளாவிய சந்தையில் இன்று (ஏப்.11) வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையே மீண்டும் வர்த்தக போர் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலையும் உச்சத்தை அடைந்துள்ளது. அதாவது, இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 31.10 கிராமுக்கு (1 அவுன்ஸ்) 3208 அமெரிக்க டாலர் (ரூ.2,76,029) மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உலக வரலாற்றில் புதிய மைல் கல் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.