மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று (ஏப்ரல் 11) பகல் 12 மணியளவில் செய்தியாளரக்ளைச் சந்திக்க இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும், இந்த செய்தியாளர் சந்திப்பில் அமித் ஷாவுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். செய்தியாளர் சந்திப்புக்காக 7 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. இதனால், அவருடன் மேடையில் இடம்பெறப் போகும் தலைவர்கள் யார்? யார்? என கேள்வி எழுந்துள்ளது.