போகோ நிறுவனம் தனது அடுத்த முதன்மை ஸ்மார்ட்போனான போகோ எஃப்7-ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. கடந்த மாதம் உலகளாவிய சந்தைகளில் Poco F7 Pro மற்றும் F7 Ultra அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இதன் மீதான எதிர்பார்ப்பு இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்த புதிய போன் மே அல்லது ஜூன் மாதங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு v15, அதிநவீன குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த போன் உருவாகியுள்ளது.