வேடசந்தூர்: வீட்டுக்குள் புகுந்த 8 அடி நீளம் உள்ள சாரை பாம்பு

77பார்த்தது
வேடசந்தூர் ஆத்துமேடு அய்யனார் நகரை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி பராசக்தி (வயது 55) மகன்கள் திருமணம் ஆகி வெளியூரில் உள்ள நிலையில் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பாக அமர்ந்திருந்த பொழுது பெரிய பாம்பு ஒன்று காம்பவுண்டுக்குள் நுழைவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த நபர்கள் அலறி ஓடினர். இது குறித்து வேடசந்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான ராஜகுபேரன், விப்பின்ஜோதி, ஜேம்ஸ்பிரபுதாஸ், விஜயகுமார், எட்டையா ஆகிய வீரர்கள் காம்பவுண்டுக்குள் இருந்த பாத்ரூமில் பதுங்கி இருந்த எட்டு அடி நீளமுள்ள சாரை பாம்பை அரை மணி நேரம் போராடி உயிருடன் பிடித்து கொண்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி