எய்ட்ஸ் பாதிப்பு இந்தியாவில் 0.23 சதவீதமாக உள்ளது. அதே நேரம் தமிழ்நாட்டில் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக அது 0.16 சதவிதமாக உள்ளது. இதை பூஜ்ஜியமாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்கென முத்தமிழறிஞர் கலைஞரால் தொடங்கப்பட்ட அறக்கட்டளையின் மூலம் இதுவரை 7,303 குழந்தைகளுக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.