கொலம்பியா பல்கலைக்கழகம் 26 பேரை இரு குழுக்களாக பிரித்து ஆய்வு மேற்கொண்டது. முதல் குழுவுக்கு மாலை 5 மணிக்கு முன்னரும், 2-வது குழுவிற்கு 5 மணிக்கு பின்னரும் கலோரி கொடுக்கப்பட்டு ரத்த சர்க்கரை அளவு, இதய செயல்பாடு பரிசோதிக்கப்பட்டது. குழு ஏவை சேர்ந்தவர்கள் ஆரோக்கியமாக இருப்பதும், பி குழுவை சேர்ந்தவர்கள் ஆரோக்கியம் குறைந்திருப்பதும் தெரியவந்தது. தினசரி கலோரி தேவையில் 45%-ஐ மாலை 5 மணிக்குள் எடுத்துக் கொள்வது ஆரோக்கியம் தரும் என்பது நிரூபணமாகி உள்ளது.