விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தகவல்

68பார்த்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கென தமிழ்நாடு அரசு சார்பில் மொத்தம் 49 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, பள்ளி விடுதிகள் மாணவர்களுக்கு 28 விடுதிகள், மாணவிகளுக்கு 14 விடுதிகள், கல்லுாரி மற்றும் பாலிடெக்னிக் விடுதிகள் மாணவர்களுக்கு ஒரு விடுதி, மாணவிகளுக்கு 6 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐ. டி. ஐ. , மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.

அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 4-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணைச்சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி