அரசு மகளிர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பதவி ஏற்பு

76பார்த்தது
அரசு மகளிர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பதவி ஏற்பு
திண்டுக்கல்மாவட்டம்பழனி அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காகவும் கல்வித்தரத்தை உறுதி செய்வதற்காகவும் ஆசிரியருடன் பெற்றோர்கள் இணைந்து செயல்படுவதற்காக மேலாண்மை குழு என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் உறுப்பினர்களை தேர்வு செய்து மாணவர்களின் வளர்ச்சிக்கு மேலாண்மை குழு உறுதுணையாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மிகவும் சிறப்பு பெற்ற பள்ளியாகும் தொடர்ந்து கல்வி சேவையில் பல சாதனைகளை செய்து வரும்பள்ளிகளில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மிகவும் புகழ் பெற்றதாக விளங்கி வருகின்றனர். இதனடிப்படையில் தற்போது மேலாண்மை குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வில் 2024 26 ஆம் ஆண்டுக்கான பள்ளி மேலாண்மை குழு உறுப்பினராக பெரிய பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த சாதிக்அலி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினராக பதவி ஏற்றுள்ள சாதிக் அலிக்கு சமூக ஆர்வலர்களும் தன்னார்வலர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி