“ரஜினிகாந்த் எங்களுக்கு உதவினார்" - லிவிங்ஸ்டன் மகள் உருக்கம்

543பார்த்தது
“ரஜினிகாந்த் எங்களுக்கு உதவினார்" - லிவிங்ஸ்டன் மகள் உருக்கம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘லால் சலாம்’ படத்தில் நடிகர் லிவிங்ஸ்டன் நடித்துள்ளார். அப்போது, அவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த ரஜினிகாந்த லிவிங்ஸ்டனுக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார். இதுகுறித்து லிவிங்ஸ்டனின் மகள் கூறுகையில், “என்னுடைய அம்மா மருத்துவமனையில் அட்மிட் ஆனதும் ரஜினி எங்களுக்கு ரூ.25 லட்சம் கொடுத்தார். என்னுடைய அப்பா வாங்க மறுத்ததும், நான் ஒரு அண்ணனாக கொடுக்கிறேன் என உரிமையாக கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி