மதிமுக தலைமைக் கழக செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தனது மனைவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தனது மகள் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு நேரில் சென்ற துரை வைகோ, இன்று (செப்டம்பர் 21) அழைப்பிதழை வழங்கினார்.