திண்டுக்கல் மாவட்டம்
பழனி பேருந்து நிலையம் முன்பு தென்னிந்திய பார்வேர்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதாகவும், சிறு தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் மின் கட்டணம் உயர்வால் கடுமையான பாதிக்கப்படும், பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் அதனால் மின் கட்டணத்தை உடனடியாக அரசு குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். அண்டை மாநிலங்களில் மின் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில் தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் பேசினார். தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சபரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.