மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

77பார்த்தது
மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 19.09.2024 (வியாழக்கிழமை) காலை 10.00 மணியளவில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலத்திலுள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

அன்றைய கூட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான உதவித்தொகை உதவி உபகரணங்கள் மற்றும் இதர கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். மாற்றுதிறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் உதவிகள் வாரியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேற்படி குறைதீர்க்கும் நாளில் மனுக்கள் அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், இருப்பிடத்திற்கான ஆதாரமாக குடும்ப அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 1, மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து மனு அளிக்க வேண்டும்.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 19.09.2024 அன்று காலை 9.30 மணிக்குள் நேரில் வந்து மனுக்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மாற்றுதிறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குறைகளை மனுக்கள் மூலம் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி