ஒட்டன்சத்திரம்: பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

60பார்த்தது
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய அலுவலர் ஜெபாரோசம்மால் வேடசந்தூர் பேரூராட்சி பகுதிகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், பள்ளி இடைநிற்றல், குழந்தை திருமணம் ஆகியவற்றை கண்காணித்து அது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க முன்வர வேண்டும் எனவும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி, ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் தில்சாத் பேகம் காட்டு பாவாசேட், ஆறாவது வார்டு கவுன்சிலர் யாஸ்மின் ரியாஜுதீன், எட்டாவது வார்டு கவுன்சிலர் அன்சர் மைதீன், பேரூராட்சி துணைத் தலைவர் சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி டீக்கடை சுப்பிரமணி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி