திண்டுக்கல்: பெற்றோர்களுக்கு அபதாரம் விதிப்பு - கடும் எச்சரிக்கை

2269பார்த்தது
திண்டுக்கல்: பெற்றோர்களுக்கு அபதாரம் விதிப்பு - கடும் எச்சரிக்கை
திண்டுக்கலில் சிறுவர்கள் இயக்கிய 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் பெற்றோர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பெயரில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சிபின் அறிவுரைபடியும், போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சணாமூர்த்தி, உதவி ஆய்வாளர் திலிப் குமார் தலைமையிலான போக்குவரத்து போலீசார் திண்டுக்கல் நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதிக அளவில் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 10க்கும் மேற்பட்ட இளம் சிறார்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன ஓட்டிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 18 வயது உட்பட்ட சிறுவர்களிடம் இனி எக்காரணம் கொண்டும் வாகனத்தை கொடுக்ககூடாது. மீறி கொண்டு வரும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என பெற்றோர்களை போலீசார் எச்சரித்தனர். போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி செயல் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி