காயத்துடன் சுற்றிய புலிக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை

73பார்த்தது
காயத்துடன் சுற்றிய புலிக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை
திண்டுக்கல்: கொடைக்கானல் மேல்மலை கிராமமான கூக்கால், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மஞ்சம்பட்டி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு வனத்துறை சார்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகள் கணக்கெடுப்பு நடந்தது. அதில் ஒரு ஆண் புலி கழுத்தில் கயிற்றுடனும், காயங்களுடனும் சுற்றித்திரிந்த புகைப்படம் பதிவாகி இருந்தது.

காயத்துடன் சுற்றிய புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். கூக்கால் அடுத்த கழுகு ஓடை பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் புலி சிக்கியது. இதனையடுத்து கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், சதாசிவம் ஆகியோர் கூண்டுக்குள் சிக்கிய புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். சிறிது நேரத்தில் புலி மயக்கம் அடையவே அதன் கழுத்தில் சுற்றி இருந்த கயிற்றை அகற்றி காயத்துக்கு சிகிச்சை அளித்தனர்.‌ சிகிச்சை முடிந்ததும் அந்த புலி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடப்பட்டது.

தொடர்புடைய செய்தி