கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் தேர்வாகியும் வேலையின்றி தவிக்கும் பட்டதாரிகள்!

67பார்த்தது
கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் தேர்வாகியும் வேலையின்றி தவிக்கும் பட்டதாரிகள்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் தேர்வான 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தற்போது வரை வேலை வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவலை NITES அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பொது முடக்கத்திற்கு முன் ஆண்டு தோறும் சுமார் 2 லட்சம் ஐ.டி பட்டதாரிகள் கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் பணியமர்த்தப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் தொடக்கத்திலிருந்தே முக்கிய இந்திய ஐடி நிறுவனங்கள் புதிய நியமனங்களை குறைத்து விட்டதாக மனிதவள ஆய்வாளர்களும், கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலகங்களும் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி