மாமூல் கேட்டு ரகளையில் ஈடுபட்ட 4 பேர் கைது

61பார்த்தது
மாமூல் கேட்டு ரகளையில் ஈடுபட்ட 4 பேர் கைது
சென்னை கோடம்பாக்கத்தில் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு ரகளையில் ஈடுபட்ட சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கஞ்சா மற்றும் மதுபோதையில் பைக்கில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் மாமூல் கேட்டு வியாபாரிகளை மிரட்டியது. மளிகை, சூப்பர் மார்க்கெட் கடைகளில் பணம் தர மறுத்ததால் ஆயுதங்களுடன் பொருட்களை மர்ம கும்பல் அடித்து நொறுக்கியது. 10க்கும் மேற்பட்ட பைக்குகளை அடித்து நொறுக்கி கீழே தள்ளிவிட்டு, தட்டிக் கேட்டவரை கத்தியால் வெட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி