இன்ஸ்டா ரீல் மோகத்தால் உயிரை விட்ட இளைஞர் (வீடியோ)

14081பார்த்தது
ஜார்க்கண்ட் மாநிலம் சாகிப்கஞ்ச் மாவட்டம் ஜிர்வபரி பகுதியை சேர்ந்த இளைஞர் தஜிப் (வயது 18) இவர் தனது நண்பர்களுடன் நேற்று (மே 21) ஜிர்வபரியில் உள்ள கல்வாரியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காக தஜிப் 100 அடி உயரத்தில் இருந்து ஏரிக்குள் குதித்துள்ளார். தஜிப் ஏரிக்குள் குதிப்பதை அவரது நண்பர் வீடியோவாக எடுத்துள்ளார். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய தஜீப் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. பின்னர் தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் வந்து அவரை சடலமாக மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.