மழையால் காய்கறிகள் விலைகள் கிடுகிடு உயர்வு

69பார்த்தது
மழையால் காய்கறிகள் விலைகள் கிடுகிடு உயர்வு
தமிழகத்தை வாட்டி வந்த கோடை வெயில் தணிந்து, தற்போது பல இடங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், தொடர் மழை காரணமாக, திண்டுக்கல் காய்கறி சந்தைக்கு 10 டன்னுக்கும் குறைவாகவே காய்கறிகள் வரத்து உள்ளது. தொடர் முகூர்த்தங்கள் மற்றும் திருவிழாக்கள் எதிரொலியால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் ரூ.250, வெள்ளைப்பூண்டு ரூ.400, இஞ்சி ரூ.200, உருளைக்கிழங்கு ரூ.50, பீட்ரூட், முள்ளங்கி தலா ரூ.30, கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.70, புதினா ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரட், வெள்ளரி, கத்தரிக்காய், மிளகாய் உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி