பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி முழு உருவச்சிலை வேண்டி மனு

55பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் வன வேங்கை கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் தமிழ் மொழியில் சிறந்து விளங்கிய புலவரான பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி எழுதிய இலக்கிய பாடல்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் முழு உருவம் படத்தோடு பதிப்பிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் புலவருக்கு மதுரையில் நூலகத்தோடு அமைந்த முழு உருவச்சிலை தாங்கிய மணிமண்டபம் நிறுவ வேண்டும் எனக் கோரி மனு முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் இந்நாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சிகாலத்தில் கண்டிப்பாக சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி