முரசொலி செல்வம் மறைவுக்கு நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “என்னுடைய இனிய நண்பர் முரசொலி செல்வம் மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. பத்திரிகை ஆசிரியராக அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக திராவிடக் கருத்தியலைச் சுமந்தவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.