மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், மும்பையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைலையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இன்று (அக்.10) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.