சரஸ்வதி பூஜைக்கு படைக்க வேண்டிய உணவுகள்

62பார்த்தது
சரஸ்வதி பூஜைக்கு படைக்க வேண்டிய உணவுகள்
நவராத்திரியின் 9ஆம் நாள் சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது. அந்த சரஸ்வதி பூஜை அன்று படைக்க வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம். பொரி கடலை, அவல், வெள்ளை அல்லது கருப்பு கடலை சுண்டல் செய்யப்படும். என்ன பழங்கள் இருக்கிறதோ அதனை வாங்கி படைக்கலாம். வெல்லம் சேர்த்த நெய் அப்பம் செய்யலாம். பால் பாயசம், உளுந்து வடை, கேசரி, தயிர்சாதம் படைக்காலம். விதவிதமான உணவுகளை செய்ய முடியாதவர்கள், வாழைப்பழம், தேங்காய், பொரி மட்டும் வைத்து பூஜிக்கலாம்.

தொடர்புடைய செய்தி