கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் 1 லிட்டர் மற்றும் 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் ஐந்து லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்து சூழ்நிலை அமைந்துள்ளது மேலும் சுற்றுலாத்துறை சார்பாகவும் கொடைக்கானல் நகராட்சி சார்பாகவும் பல்வேறு பகுதிகளில் 10 இருக்கும் மேற்பட்ட தண்ணீர் ATM வைக்கப்பட்டுள்ளது ஆனால் வைத்திருக்கும் எந்த ஒரு இடங்களிலும் தண்ணீர் ஏடிஎம் ஆனது இயங்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கலந்த வாரம் கொடைக்கானலுக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள 12 தண்ணீர் ATM இயங்குவதாக கூறினார் மேலும் 10 இடங்களில் வைக்கப் போவதாக கூறியுள்ளார் இந்நிலையில் கொடைக்கானலில் வைக்கப்பட்டுள்ள 12 இடங்களில் உள்ள தண்ணீர் ATM இயங்காமல் இருக்கிறது.
இதைக் குறித்து கொடைக்கானல் சமூக ஆர்வலர் கூறுகையில் தண்ணீர் ATM வைப்பது வரவேற்பு கூறியது ஆனால் இதற்கு முன்னால் வைத்த தண்ணீர் ATM ஏதும் இயங்காமல் இருக்கிறது என குற்றச்சற்று வைத்துள்ளார்.
மேலும் வைக்க இருக்கும் தண்ணீர் ATM தரமாக பராமரித்து இதற்கு முன் வைத்துள்ள தண்ணீர் ATM களை சீர் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.