திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ந்து மூன்று நாட்கள் மழை பெய்து வருவதால் கொடைக்கானலில் காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது, இந்நிலையில் கொடைக்கானலில் இருந்து மேல்மலை கிராமங்களான பூம்பாறை மன்னவனூர் கூக்கால் போன்ற 15 க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் ஒரே பிரதான சாலையாக கொடைக்கானல் பூம்பாறை சாலை அமைந்துள்ளது இச்சாலை 15 கிலோமீட்டர் தொலைவில் வனத்துறைக்கு கட்டுப்பட்ட அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது இன்று காலை பூம்பாறைக்கு செல்லும் பிரதான சாலையில் மரம் விழுந்ததில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் தீயணைப்பு துறையினர் மரம் வெட்டும் இயந்திரங்களைக் கொண்டு போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.
மேலும் மிகப் பெரிய அளவு உள்ள மரம் என்னும் காரணத்தினால் தீயணைப்பு துறையினர் அரை மணி நேரத்தில் மேல் அகற்றும் பணியில் போராடி வருகின்றனர்.