நிலக்கோட்டை அருகே முசுவனூத்து பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இப்பகுதியில் உள்ள பாறைகளை வெடி வைத்து உடைத்து அதன் கற்களை, நிலக்கோட்டை அருகே மல்லனம்பட்டி மற்றும் வாடிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கிரசருக்கு எடுத்துச் செல்கின்றனர்.
தனியார் கல்குவாரியால் கடவாக்குறிச்சி மலை காணாமல் போவதால், இதுகுறித்து இப்பகுதி கடவாக்குறிச்சி நீர் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர், துறை சார்ந்த அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட பலருக்கு பலமுறை புகார் மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு குவாரி அமைப்பதற்கு விளம்பர அரசு அனுமதி வழங்கி உள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் கூறினர். எனவே, நிலக்கோட்டை அருகே காணாமல் போகும் கடவாக்குறிச்சி மலையை காப்பாற்ற வேண்டுமென, இப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விதிகளை மீறி செயல்படும் குவாரிகளை தடை செய்ய வில்லை என்றால் பொதுமக்கள் அனைவரும் கிராமங்களிலிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை என கிராம மக்கள் கவலை தெரிவித்தனர்.