நடிகர் கருணாஸ் காரை சோதனையிட்ட பறக்கும் படை அதிகாரிகள்

53பார்த்தது
பள்ளப்பட்டி அருகே பிரச்சாரத்திற்கு சென்ற நடிகர் கருணாஸ் காரை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பரபரப்பு.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி, அணைப்பட்டி, விருவீடு பகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர். சச்சிதானத்தை ஆதரித்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான கருணாஸ் சென்றார்.

அவரது வாகனத்தை திங்கட்கிழமை காலை 8 மணியளவில் திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழி சாலை திண்டுக்கல் மாவட்ட எல்லையான பள்ளப்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் கருணாஸ் வாகனத்தை சோதனையிட்டனர். அதனை தொடர்ந்து அவருடன் சென்ற திமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் வாகனத்தையும் சோதனையிட்டனர் முழுமையான சோதனை பின் அவர் கார் அனுப்பி வைக்கப்பட்டது.
நடிகர் கருணாஸ் வாகனம் சோதனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி