"என்னை மீம்ஸ் போட்டு காமெடி பண்ணுவாங்களே"

75பார்த்தது
"என்னை மீம்ஸ் போட்டு காமெடி பண்ணுவாங்களே"
மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு தலைப்பாகை, பாசி மணி மாலையை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட செல்லூர் ராஜூ, பாசி மணி மாலையை கழற்ற முயன்றார். அருகில் இருந்த நிர்வாகிகள், அண்ணே, பாசமாக வடமாநிலத்தவர்கள் அணிவித்த பாசி மணி மாலையை கழற்ற வேண்டாம் என்றனர். அதற்கு, 'ஏம்பா, என்னை இந்த படத்தோடு மீம்ஸ் போட்டு காமெடி பண்ணுவாங்களேப்பா என்று செல்லூர் ராஜு கூறியதால் கூட்டம் கலகலப்பானது

தொடர்புடைய செய்தி