பகல் நேர காப்பகம் செயல்படுத்த விண்ணப்பக்கலாம்

59பார்த்தது
தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 10 மாவட்டங்களில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பகல் நேர காப்பகம் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பகல் நேர காப்பகம் செயல்படுத்த விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்படவுள்ளது. மேற்படி திட்டத்தினை செயல்படுத்த தொண்டு நிறுவனத்திற்கு 3000 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடம் இருக்க வேண்டும். மேலும் தொண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கட்டட வாடகை மானியமாக ஆண்டுக்கு ரூ. 1. 20 இலட்சம், ஆசிரியர் சம்பளம் 3 நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5. 04 இலட்சம், காப்பாளர் சம்பளம் ஆண்டுக்கு ரூ. 72, 000 மற்றும் இதர செலவுகள் உட்பட ஆண்டுக்கு மொத்தம் ரூ. 12. 48 இலட்சம் தமிழக அரசால் வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பகல் நேர காப்பகம் செயல்படுத்த விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள் ”மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்” என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என புதன்கிழமை மதியம் 1 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி